விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி, தமிழ்நாடு மாநிலத்திலுள்ள 14 அரசு சட்டக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 2017 ஆம் ஆண்டு நமது மாண்புமிகு. சட்டத் துறை அமைச்சர் அவர்களால் விழுப்புரம் திரு.வி.க. நகரில் வாடகை கட்டடத்தில் நிறுவப்பட்டது. மற்ற அரசு
சட்டக் கல்லூரிகளைப் போலவே எங்கள் கல்லூரியும் தமிழ்நாடு சட்டப் படிப்புத் துறையால் நிர்வாகிக்கப்படுகிறது மற்றும் தமிழ்நாடு சட்டப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் மூன்று வருட எல்.எல்.பி., திட்டம், ஐந்து வருடம் பி.ஏ.எல்.எல்.பி., மற்றும்
எல்.எல்.எம்., போன்ற தகவல் தொழில் நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் குடும்ப சட்டம் ஆகியவற்றை வழங்குகிறது. தற்போது இக்கல்லூரியில் சுமார் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரி வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருவதால், புதிய கட்டடம் கட்டுவதற்கான முன் மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு விழுப்புரம் சாலமேட்டில் 1.93 ஹெக்டர் (ஜி.ஓ.எண்.230/2017 (எல்.எஸ்)த்துறை) இடத்தை அரசு ஒதுக்கியுள்ளது. மாவட்ட நீதி மன்றம், விழுப்புரம் நவம்பர் 26 -2019 அன்று விழுப்புரத்திலுள்ள சாலமேட்டில் எங்கள் புதிய கல்லூரி வளாகத்தை நமது மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு சட்ட அமைச்சர் மற்றும் எங்கள் சட்டக் கல்வி இயக்குநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. புதிய வளாகம் கிட்டதட்ட 1.93 ஹெக்டர் பரப்பளவில் பரவியுள்ளது. புதிய வளாகத்தில் தனி கல்வி (இரண்டு அடுக்கு மாடி) மற்றும் நிர்வாகத் தொகுதியும், தனி நூலகத் தொகுதியும், கலையரங்கமும் உள்ளன. நிர்வாகத் தொகுதியானது நன்கு பொருத்தப்பட்ட 25 வகுப்பறைகள் ஒரு மூட் ஹால், முழு வசதியுடன் கூடிய விடியோ கான்பிரன்சிங் அரங்கம், பெரிய கருத்தரங்கு அரங்குகள், உட்புற விளையாட்டுக்களுக்கான அரங்கம், இரண்டு தனித் தேர்வு கூடங்கள், இரண்டு மின்தூக்கிகள் மற்றும் கல்லூரி வளாகம் சுற்றிலும் 95 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்பறை செல்ல ஏதுவாக சாய்வு பாதைகள் அமைக்கபட்டுள்ளது.